பாரதி முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா

அமரர்.சஜெயந்தன் செல்வரஞ்சன் ஞாபகார்த்த முன்பள்ளிச் சிறார்களின் விடுகை விழா

அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனுக்கூடாக மலையக உறவுகளின் கல்வி அபிவிருத்தியை கருத்திற்கொண்டு பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை பிரதேச செயலக பிரிவில் மிகவும் பின்னடைவான தம்பெதன்ன பிரதேசத்தில் (பண்டாரவெல நகர்ப்பகுதியிலிருந்து 15முஅ மேல் பகுதியில்) அமரர்.ஜெயந்தன் செல்வரஞ்சன் ஞாபகார்த்த பாரதி முன்பள்ளி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இம்முன்பள்ளியில் 37 மாணவர்கள் முன்பள்ளிக் கல்வியை பெறுவதுடன் இரு ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் சென்ற வருடம் முன்பள்ளிக் கல்வியை பெற்று இவ்வருடம் தரம் – 01 க்கு பாடசாலைக்கு இணையவுள்ள மாணவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்கி பரிசில்களை வழங்கி அவர்களை மகிழ்வித்து கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு 25.01.2025 ம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தம்பெதன்ன தமிழ் வித்தியாலய அதிபர் திருமதி. ஷிறிதேவி அவர்களும் ஆசிரியர்களும், தோட்ட தொழிலாளர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

அமரர். ஜெயந்தன் செல்வரஞ்சன் அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிள்ளைகளின் கலை நிகழ்வுகள், சான்றிதழ் வழங்குதல் மற்றும் புத்தக பேக், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, இப்பிரதேசத்திற்கு மிக முக்கிய தேவையாக இருந்த முன்பள்ளித் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வினைத்திறனான கற்றல் செயற்பாடு நடைபெறுவது அங்குள்ள பெற்றோர்களுக்கு அக மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்நற்காரிய பணிக்கு நிதி உதவியை உவந்தளித்துக்கொண்டிருக்கும் பிரான்ஸ் சமூக சேவை செயற்பாட்டாளர் திரு.செல்வரஞ்சன் அவர்களுக்கு இங்குள்ள உறவுகள் சார்பாக உள்ளார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் – நிர்வாகம்,
2025.01.25

Retour en haut