தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் – பிரான்ஸ் இணைந்து நடாத்திய 27வது தமிழர் விளையாட்டு விழா 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை L’Aire des Vents Dugny திடலில் சிறப்பாக இடம்பெற்றது.

இயற்கையின் கடினமான வெப்ப சூழலினால் இந்நிகழ்வினை நடத்துவது சாத்தியமில்லை என்ற நிலை இருந்த போதும் அதனை நிறுத்தாமல் தகுந்த ஆலோசனைகளை வழங்கி அனுமதி வழங்கிய 93 பிராந்திய காவல் தலைமையகம், மாகாண அவைத் தலைவர் திரு. Stéphane Troussel , அரச அதிகாரிகள் மற்றும் திடலின் உரித்துடைய நகமன்றங்களுக்கும் நமது நன்றியை உரித்தாக்குகின்றோம்.

காலை 10.30 மணிக்கு இசைப்பிரியா முழங்குவாத்திய (band) அணி இசை நடையுடன் விழா ஆரம்பமாகியது. பிரதான பொதுச் சுடரினை த. பு. க உபதலைவர் திரு. மு. ரவிக்காந் அவர்கள் ஏற்றிவைத்தார், தமிழீழத் தேசியக்கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் திரு. சி. மகிந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காப் போராடி வீரமரணத்தை தழுவிய மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், நினைவுகூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

திடலில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நினைவுச்சுடரினை த. பு. க. உறுப்பினர் திரு. ஆ. அரியராசா அவர்கள் ஏற்றிவைக்க, வருகை தந்த அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர் பாரம்பரிய இண்னியம் இசை நடனத்துடன் நகரபிதாக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், வர்த்தகர்கள், தொண்டர்கள், கலைஞர்கள், சமூக ஊடகத்தினர், மக்கள் அனைவரும் திடலின் மத்தியில் நாட்டப்பட்ட கொடிக்கம்வரை அழைத்து வரப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியினை திரு.ஸ்டீபன் துர்சல் அவர்களும், ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை திரு. அலன் ஆனந்தன் அவர்களும், த. பு. க. கொடியினை த. பு .க. பிரான்ஸ் உறுப்பினர் திரு. த. செல்வரஞ்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர். மங்கள விளக்கினை கலந்துகொண்ட பிரமுகரிகள், வர்த்தக உரிமையாளர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்றி வைத்தனர். வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் இரு இசை அணி இளம் கலைஞர்களும் நெறிப்படுத்திய ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் (நாடகம், பாடல், நகைச்சுவை…) ஆரம்பமாகி ஒதுக்கப்பட்ட குடில்களில் சிறப்பாக இடம்பெற்றன. சிறப்பு விருந்தினர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறைசார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
பொதுச் சங்கங்கள் சிறிய பெரிய வர்த்தக நிறுவனங்களுடன் கல்யாணி உணவகம் மற்றும் சோழன் உணவகம், சோழன் பல்பொருள் வாணிபம் நிறுவப்பட்டு, சோழன் பல்பொருள் அங்காடியின் 5ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிர்ஷ்டலாப சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது. நல்வாய்ப்பில் புதிய மகிழுந்திற்கு குலுக்கல் முறையில் 1902 என்ற இலக்கம் தெரிவானது. 100 ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டது. இப்பரிசில்களை சோழன் பல்பொருள் வாணிபம் வழங்குகின்றது. அட்டில் சமர் சமையல் திறன் போட்டி லவ்லி ஓசோன் மாலா மளிகை எஸ்.பி. ராயூ யுவலறி, பேபி பலூன் ஆதரவில் இடம்பெற்றது.
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் திரளுடன் இரவு 9.30 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வு கொடி இறக்கத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகள், தன்னார்வத் தொண்டர்கள், குடும்பத்தினர்கள், தேசியக் கட்டமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், ஊர்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடகங்கள், சமூக வலை ஒளி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திரு. விநாயகமூர்த்தி, திருமதி. சுபாஷினி, செல்வன். ஆருஜன், செல்வி. ராஜசுலோசனா ஆகியோர் ஆரம்ப நிகழ்வுகளை தொகுத்து வழங்க Royal Sono சிவா அவர்கள் ஒலி சேவையினை வழங்கியிருந்தார். கலை நிகழ்சி ஒருங்கிணைப்பை திரு. அருள்மொழித்தேவன் திரு. கனி ஒருங்கிணைக்க, பிரபலபல கலைஞர்களின் நிகழ்வுகளுடன், நடனங்கள் மற்றும் பல கரோக்கி இசைக்குழுக்களும் இசை நிகழ்சிகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து கூட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்வுக்கு உறுதுணையாக பார ஊர்திகள் சேவை, ஒலி ஒளி சேவை, நிழற்படம், காணொளிப்படம், ஆவணப்படப்பிடியுப்பு மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிய அனைத்து நிறுவனங்களுக்கும்
விழா முடிந்த மறு இரு தினங்களும், மைதான துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்த எமது கழக தொண்டர்களுக்கும் Express Events ஊழியர்களை ஒழுங்கு செய்து தந்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்-பிரான்ஸ்












































































