
செல்வி. தர்ஷன் தமிழினி மற்றும் செல்வி. தர்ஷன் கயாழினி இருவரினதும் 8வது பிறந்தநாளை முன்னிட்டு 10.01.2025, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக, வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 19 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
செல்வி. தமிழினி மற்றும் செல்வி. கயாழினி இருவரும் சகல செல்வங்களும் பெற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துவதோடு இவ்வுதவிக்கான நிதிப்பங்களிப்பினை வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
