இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, நடுதாதோட்டம், கபனசெடி ஆகிய கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்தினருக்கு தலா 5 000 ரூபாய்க்கான உணவுப்பொதி இன்று (07.12.2025) வழங்கி வைக்கப்பட்டது.
75 பொதிகளுடனான வாகனம் அதிகாலை மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டது. இருந்த போதினும் மலையக்கத்தில் ஏற்பட்ட வழித்தடங்கல்னால் 3 மணி நேர காத்திருப்பிற்குப் பின், பிற்பகல் அனைத்து பொதிகளும் வழங்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முகநூல் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டத்திற்கு கரம் கொடுத்த உறவுகள்அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
