தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மட்டு, ஊரியன்கட்டு பாடசாலைக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு ஊரியன்கட்டு பாடசாலையில் இருந்த தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும் இயந்திரம் மின்னல் தாக்கி பழுதடைந்ததால், மாணவர்களுக்கு குடிநீருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பள்ளி நிர்வாத்தினர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்

அப்பள்ளி மாணவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக, புதிய இயந்திரம் மற்றும் அதற்குரிய உபகரணங்களை இன்று (19.02.2025) வழங்கிய, திருமண வாழ்வில் இணைந்திருக்கும் திரு. திருமதி. கபிலன் தாரணி தம்பதியினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Défiler vers le haut