வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது.

மாவட்டமானது 40 வருட வரலாற்றில் கண்டிராத வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு மாவட்டத்தின் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கமைய 30 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 269 அங்கத்தவ்களும் 22 முழுமையாகவும் 822 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளதோடு 15 ஆயிரம் வரையான கால்நடைகளை காணவில்லை. இவற்றில் ஒரு சில ஆயிரம் கால் நடைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டாலும் எஞ்சியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இதேநேரம் கடும். மழை பொழிந்து 3 நாள்கள் கடந்தபோதும் 3ஆம் திகதி மாலைவரை குஞ்சுக்குளம் பகுதி மக்கள் வெளியேற முடியாத நிலையே.

இவ்வாறான நிலையில் உள்ளவர்களிற்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினரே உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு சற்று குறைந்த பாதிப்பை எதிர்நோக்கி இருந்தாலும் நானாட்டான் ,முசலி மற்றும் மாந்தை மேற்கு பிரதேசங்கள் மிகப் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியது.

மாந்தை மேற்கில்
பெரிய மடு, கூராய், சீது விநாயகபுரம் உள்பட்ட பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இங்கே கடற்படை மற்றும் விமானப் படையின் உதவியுடன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கால்நடைகளே வாழ்வாதாரமாக காணப்படும் பிரதேசமான மன்னார் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் இறந்து அல்லது காணாமல் போய் உள்ளதாக அதி்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சியுள்ள பல ஆயிரம் கால் நடைகளும் நோய் வாய்ப்பட்டுள்ளதனால் வடமாகாண கால்நடை உற்பத்தி மாகாண பணிப்பாளர் வைத்திய கலாநிதி வசீகரன் தலைமையில் விசேட கால் நடை வைத்தியர்கள் அங்கே பயணித்து எஞ்சிய கால்நடைகளின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Défiler vers le haut