தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்டியல் திட்டம் மூலம் 1 934,79 ஈரோக்கள் கிடைக்கப்பெற்றது.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நிதிக்காக 03.12.2025 தொடக்கம் 07.12.2025 வரை தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்டியல் திட்டம் மூலம் 1 934,79 ஈரோக்கள் கிடைக்கப்பெற்றது.

இத்திட்டத்திற்காக பணியாற்றிய தொண்டர்கள், உதவிய மக்கள், ஒத்துழைப்பு நல்கிய வர்த்தகப் பெருமக்கள் மற்றும் வளரி வலைக்காட்சி, சோதியா கலைக்கல்லூரி அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தாயக மக்களுக்கான நிவாரணப் பணி மற்றும் மீள் கட்டுமானப் பணிக்கான நிதி தேவை உள்ளது. எனவே உதவி செய்ய விரும்புவோர் த. பு. க. பணிமனையுடன் தொடர்புகொண்டு வழங்க முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் – பிரான்ஸ்

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Défiler vers le haut