இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிக்காக 03.12.2025 தொடக்கம் 07.12.2025 வரை தமிழர் வர்த்தக மையப் பகுதியான லா சப்பல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட உண்டியல் திட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியில் இருந்து.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இத்திமடு, பழம்பாசி, கரடிப்பிலவு ஆகிய கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 68 குடும்பத்தினருக்கு உலருணவுப் பொதிகள் இன்று (10.12.2025) வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக பணியாற்றிய தொண்டர்கள், உதவிய மக்கள், ஒத்துழைப்பு நல்கிய வர்த்தகப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி, 17ம் கட்டை, தண்டுவான் ஆகிய கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பத்தினருக்கு உலருணவுப் பொதிகள் இன்று (09.12.2025) வழங்கி வைக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முகநூல் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வெள்ள நிவாரண உதவித் திட்டத்திற்கு கரம் கொடுத்தஅனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
