ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஏற்பாட்டில் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு செவ்ரோன் தமிழ்ச்சோலை மண்டபத்தில் 26.12.2025 மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதான பொதுச் சுடரை தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர் திரு. மு. அரியபுத்திரன் ஏற்றிவைக்க, சுனாமியால் சாவடைந்த மக்களுக்கான பிரதான நினைவுச்சுடரை தமிழர் புனர்வாழ்வுக் கழக கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

வருகைதந்த தேசிய செயற்பாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகத்துறை சாந்தோர், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மலர் தூவி தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

நினைவுரையினை த. பு. க பிரான்ஸ் தலைவர் திரு. கருணைராஜன், தேசிய செயற்பாட்டாளர் திரு. நாயகன், த. பு. க பிரான்ஸ் பேச்சாளர் திருமதி. சுபா, த. பு. க பிரான்ஸ் கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வினை திரு. அருள்மொழித்தேவன் தொகுத்து வழங்கினார். நிகழ்வு 6.45 மணிக்கு நிறைவு பெற்றது

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Retour en haut