அன்பான உறவுகளே
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்தும் மாபெரும் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வு 28 – 06 – 2026 லூ பூர்சே – துனி திடலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்வில் வழமைபோல குறுந்தூர உள்ளக மரதன், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் கிளித்தட்டு கயிறு இழுத்தல் சங்கீதக்கதிரை முட்டியுடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் என பல நடைபெறவுள்ளது.
சிறுவர்கள், மழலைகளுக்கான திறனாற்றல் போட்டிகள், கரம், சதுரங்கம் மற்றும் ஓட்டப் போட்டிகள் சனரஞ்சக கலைநிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்வுகள் என மகிழ்விக்கும் கலை நிகழ்வுகளுடன்
நாள்முழுவதும் நாவிற்கினிய சுவையான தாயக உணவுகளை விற்பனைசெய்ய உணவகங்கள், பாரம்பரிய சிற்றுண்டி கடைகள் மளிகைக்கடைகள், வியாபார விளம்பரக்கடைகள், ஆடை அணிகலன் கடைகள், விளம்பர காட்சியகங்கள், சேவை நிறுவங்களின் அலுவலகங்கள் மற்று சமூக நிறுவனங்களின் கூடாரங்கள் என மக்களுக்கான சேவைகளோடு
மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2026
அனைத்து தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து, தமிழர்களாக ஒன்றுகூடி நிகழ்விலும் விளையாட்டு போட்டிகளிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து, ஒருநாள் பொழுதை மகிழ்வாய்கழித்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
பிரான்ஸ் தமிழர் ஒன்றுகூடலாக ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
தமிழர் விளையாட்டு விழா ஏற்பாட்டுக்குழு
தமிழர் புனர்வாழ்வுக்கழம் பிரான்ஸ்

