அடைமொழி இல்லாதவர்கள்

நேற்று நடந்த #அல்பாசெந்தமிழ்மாலை பொழுதில் கவனித்த வற்றை பேசலாம் …

கிட்டத்தட்ட 150க்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பற்றிய மேடை அதிகமாக மக்களை ஈர்க்கவில்லை இப்படியெரு நிகழ்வு நடக்குறது என்பதை கூட பல பிரபல நிகழ்ச்சிகள் செய்பவர்கள் கூட அதனை விளம்பரம் செய்யவில்லை…

காரணம் ஒன்றுதான் அவர்கள் பெயர்கள் முன்னால் அடைமொழியில்லை(சூப்பர் சிங்கர்,சரிகமபத,சன் ரீவி என தென்னிந்திய தொலைக்கட்சியில் பாடியவர்கள் அல்லது ஆடியவர்கள்)இந்த அடைமொழியின் ஈர்ப்பு என்பது சினிமா தனமாக எமது மனங்களில் ஒட்டியுள்ளது,..

ஆனால் எங்கட பொடியல்யென கொண்டாட வேண்டிய எங்கட ஆட்களே அவர்களை கொண்டாட மறுப்பதன் பின்னாடியுள்ள அரசியல் என்பது பெரியது….

அங்கு ராப் பாடகர் சுஜீத் சொன்னது போல 2005ல் தான் ராப் செய்யும் போது சும்மா கத்துறான் என சொன்னவர்கள் தான் இன்று அதனை தூக்கி கொண்டாடிட்டு இருக்குறார்கள்….

காரணம் ஒன்றுதான் தென்னிந்திய ரீவியில் வந்தால் பிரபலம் என்னும் நம்பிக்கை ஒன்று நம்மவர் மத்தியில் இருக்கு…

அடைமொழியில்லாத ஈழ கலைஞர்கள் கவனிக்கப்படுவதில்லை என்பதை நேற்று கண்ணூடாக பார்க்க முடித்தது….

மேடையில் குப்பையில் குண்டு மணிகளும்,சேற்றில் செந்தாமரைகளும் வைரமாக ஜெலித்தார்கள் ப்பா எங்களிடம் புலம்பெயர் தேசத்தில் இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டா நாம் இன்னும் தென்னிந்திய பிரலபங்களை விஐபி டிக்கெட் போட்டு கூப்பிட்டு ஆராத்தி எடுகுறோம் என்பதாக…

மேடையில் ஆண்களை விட பெண்கள் அழகாக நிகழ்வை கொண்டு போனார்கள் பாடகிகள் முதல் டான்ஸர்கள் வரை உற்சாகத்துடன் இருந்தார்கள்…

ஆண் நடனக்கலைஞர்கள் சூப்பன் கோழிகள் மாதிரி சோர்வாகயிருக்க பெண்கள் வெள்ளடியன் சேவல்கள் மாதிரி தெறிக்க விட்டார்கள் அதிலும் பாடகிகள் வேற லெவல் 👌

அங்கட நிகழ்வு நடந்தது எங்கட கலைஞர்கள் மேடையில் இருந்தார்கள் என்பதுதான் முக்கியம்…

இறுதியில் மைக் பிடிச்சு மாவீர்கள் தியாகம் வாழ்க இந்த நிதி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் என்னும் ஏமாற்று வார்த்தைகள் இல்லை..,

அழகாக நன்றி வணக்கத்துடன் ஒரு சினிமா மாதிரி தொடராக தேய்வின்றி நிகழ்வு போனதால் நேரம் போனது தெரியவில்லை…..

சலிக்காமல் ஒரு மேடை நிகழ்வை கொண்டுசென்ற விதம் அருமை பாரட்டுகள்…💐

ஆக அடைமொழியில்லாதவர்கள் அடையாளம் பேணப்பட வேண்டும்.

நன்றி🙏🏽 yogoo_arunakiri

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Retour en haut